Welcome to Milton Keynes Tamil Academy!
Our Goal & Mission is to ensure our Tamil culture & values will continue to grow to all future generations!
Our History
மில்ரன்கீன்ஸ் தமிழ்க்கல்விக்கழகமானது புலம்பெயர் வாழ்வில் எங்கள் உயிரிலும் மேலானதாய்மொழியாம் தமிழ்மொழியையும் தமிழர் தம் கலைகலாச்சாரங்களையும் எங்கள் அடுத்த சந்ததிகளுக்கு எடுத்துச்சொல்லும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த கல்விக்கழகமானது மில்ரன்கீன்ஸ்சில் உள்ள சமுக ஆர்வலர்களால் அதன் தேவையையும் அவசியத்தையும் உணர்ந்து பலவிதமான தொடர்முயற்சிகளால் 03-12-2011அன்று பெருந்தொகையானவர்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இக்கல்விக்கழக்தில் தலைமையாசிரியர் உட்பட 43 ஆசிரியர்கள் தங்கள் சுயவிருப்புடனும் ,சேவைமனப்பான்மையுடனும் மாணவர்களுக்கான கல்விப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.அண்ணளவாக300 மாணர்கள் அதிபாலர் நிலையிலிருந்து ஆண்டு 12 வரை கல்விகற்கின்றார்கள்.
சகல மாணவர்களும் வருடாவருடம் பாடசாலைமட்டத்திலும், பிரித்தானியா மட்டத்திலும் தமிழர்கல்விமேம்பாட்டுப்பேரவையால் நடாத்தப்படும்
தமிழ்மொழித்தேர்வு ,மற்றும் தமிழ்திறன் போட்டிகளிலும் கலந்துகொள்கிறார்கள்.
கலந்துகொள்வதோடுமட்டுமல்லாமல் பிரித்தானியமட்டத்தில் கூடிய மாணவர்கள் சித்தியடைந்த மாணவர்களையும் , தமிழ்மொழிப்போட்டிகளில் அதிகூடிய மாணவர்கள் வெற்றியீட்டிய பாடசாலையாகவும் சாதனைபடைத்து நிற்கின்றது.
மேலும் வருடாந்த நிகழ்வுகளாக தைப்பொங்கல், சரஸ்வதிபூசை, நத்தார்விழா, பரிசளிப்புவிழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. முக்கியமாக விளையாட்டுப்போடியின்போது எங்கள் தமிழ்மன்னர்களின் பெயர்களான பண்டாரவன்னியன்,எல்லாளன்,சங்கிலியன் எனமூன்று இல்லங்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக விளையாட்டுப்போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கணிசமான எங்கள் கல்விக்கழக ஆசிரியர்கள் பிரித்தானியக்கல்விமேம்பாட்டும்பேரவையால் நடாத்தப்ப்படும் ஆசிரியர் பயிற்சிகளில் கலந்து கொள்வதுடன், அவர்களால் நடாத்தப்படும் சகல பரீட்சைகளுக்கும் தேர்வுநடத்துனர்களாகவும், தேர்வு மையப்பொறுப்பாளர்களாகவும்
கலந்துகொள்கின்றனர். அத்தோடு பல ஆசிரியர்கள் வருடாவருடம் பிரான்சில் நடைபெறும் வினாத்தாள் திருத்தும் பணிகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றனர்.மேலும்
கணிசமான ஆசிரியர்கள் பட்டயக்கல்வியைமுடித்து பட்டப்படிப்பையும் முடித்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் இந்த கல்விக்கழக்தில் பெற்றோர்களும் நலன்விரும்பிகளும்
பயன்பெறும் வகையில், உணவுப்பாதுகாப்பு, பிரித்தானியகவல்துறையினரிடமிருந்து
கருத்தரங்குகள் போன்ற எம்மவர்கள் நலன்சார்ந்த கருத்தரங்குகளும் நடாதப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பாடசாலையனது தேர்தல் முறையினால் தெரிவுசெய்யப்படும் நிர்வாகத்தினர்,
பாடசாலையை ஆரம்பித்த நிறுவக உறுப்பினர்கள், சேவைமனப்பான்மையுள்ள ஆசிரியர்குழாம், என்றுமே ஆதரவான பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என்று பன்முக
ஆழுமைமிக்கவர்களாலும் மிகவும் சிறந்த முறையிலே தன்பணிகளை 10 வது வருடமாக சிறப்புடன்
பணியாற்றிவருகின்றது.
தொடர்ந்தும் உங்கள் அனைவரதும் ஒத்துழைப்புடன் வெற்றி நடைபோடும் என்பதில் பெருமைகொள்கின்றோம்.
நன்றி.
மில்ரன் கீன்ஸ் தமிழ் கல்விக் கழகம் 03-12-2011அன்று நூற்றுக்கணக்காண தமிழ் உறவுகளினால் உருவாக்கப்பட்டது.மில்ரன் கீன்ஸ் நகரிலும் அதன் அயல் பிரதேசங்களில் வாழும் தமிழ் சிறார்களின் தமிழ் மொழிக் கல்வி மற்றும் தமிழ் கலாச்சார விடயங்களை மேம்படுத்தும் முகமாக கடந்த 13 வருடங்களாக சேவையடிப்படையில் செயற்பட்டு வருகின்றோம்.